இதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன்: குல்தீப் யாதவ்!

இதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன்: குல்தீப் யாதவ்!

தான் வீழ்த்திய 5 விக்கெட்க்கு, தானே வர்ணனை செய்யும் குல்தீப் யாதவ்வின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்களில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

ரொம்ப கஷ்டம்:
இதில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில்,மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், ‘கிரிக்கெட்டில் இந்த பார்மெட்டில் சாதிக்க தான் எல்லா வீரரும் விரும்புவார்கள். டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனக்கு நெருக்க்மானது. ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பது சாதாரண விஷயமல்ல.

0 Comments 0 Comments
0 Comments 0 Comments