ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கு உதவுங்கள்!

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கு உதவுங்கள்!

ஷியாம் ஒரு 9 வயது சிறுவன், இவனது அப்பா பழங்களை விற்கும் வியாபாரம் பார்த்து வருகிறார். ரெம்ப ஏழ்மையான குடும்பம் என்பதால் பழங்கள் விற்பனையைக் கொண்டு தான் இவர்களின் அன்றாட பிழைப்பே ஓடி வருகிறது. இதனால் ஷியாம் 5 மாதங்கள் மட்டுமே படிக்கும் அவல நிலையில் இருக்கிறான். மற்ற பழ சீசன் சமயங்களில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து பழ வியாபாரம் செய்து வருகிறான். இவர்களது குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர்.

ஆங்காங்கே சென்று பழ வியாபாரம் செய்ய வேண்டும் என்பதால் எப்பொழுதும் ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டே தான் இருக்க வேண்டும். கடைசியில் ஷியாம் குடும்பம் ஒரு நிரந்தரமான இடத்தில் தங்கினார்கள். அங்கேயே அருகில் ஒரு அரசு பள்ளியும் இருக்கிறது. ஷியாமும் அவனது தங்கையும் ஏதுவாக பள்ளியில் படிக்க முடிந்தது. பழங்களை நன்றாக விற்று வியாபாரம் நடந்தால் தான் அவர்களால் ஒரு வேளை சாப்பாடே சாப்பிட முடியும். தற்போது ஷியாமுக்கு பள்ளியில் அன்னமிர்தா திட்டத்தின் மூலம் மதிய உணவை வழங்குவதால் அவனுக்கு ஒரு நேரம் திருப்தியான உணவு கிடைத்து வருகிறது.

இது போன்று பசியால் தவித்து வரும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவையாவது வழங்க உதவுங்கள்.

இந்தியா, மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் வேறுபட்ட ஒரு நாடாக இருந்தாலும் இந்தியர்கள் என்பதில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம். இந்தியா உலகின் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடான சீனாவை ஒப்பிடுகையில் இந்தியா, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட 1.9% அதிகம் ஆகும்.

அன்னமிர்தா தாக்கம்

2004 ஆம் ஆண்டில் இருந்தே அன்னமிர்தா நாடு முழுவதும் தன்னுடைய உற்சாகமான உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து விட்டது.
" உணவோடு குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் அதனுடன் உற்சாகமான கல்வியையும் வழங்குவதே எங்களின் குறிக்கோள்" என்று கோபால் கிருஷ்ணா கோஸ்வாமி, ISKCON நிறுவனர் கூறுகிறார்.இந்த நிகழ்ச்சி டெல்லி விவசாய முதலமைச்சர் ஆன ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் பாராட்டப்பட்டது என்பு குறிப்பிடத்தக்கது.

அன்னமிர்தா என்பதற்கு உணவு என்று பெயர். ISKCON உணவு நிவாரணம் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு தாயின் அரவணைப்பைப் போல ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதன் மூலம் அவர்களின் நல்வாழ்விற்கு உதவுகிறது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதே எங்கள் நோக்கம்.

இந்த அமைப்பு மூலம் நிறைய குழந்தைகள் பலனடைந்து வருகிறார்கள்.இன்னும் இதன் நன்மைகள் எல்லா குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனித நேயத்துடன் உதவ வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு நன்கொடையும் ஒரு குழந்தையின் ஒரு வேளை பசியை போக்கப் போகிறது. அவர்களின் கல்வியும் எதிர்காலமும் நம் கையி் உள்ளது. இன்றே உதவிக் கரம் நீட்டுங்கள், பசியே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். குழந்தைகளின் கண்ணில் பசியை மறையச் செய்வோம். வாருங்கள் உங்கள் மனித நேய கரத்துடன்.

0 Comments 0 Comments
0 Comments 0 Comments