முக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்

முக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்

முக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்

ஸ்தல வரலாறு:

முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில் உள்ள ஶ்ரீமுத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அக்காலத்தில் கொள்ளையர் இடையூறு அதிகமாக இருந்ததால் குரங்கனி சென்று வழிபட மக்கள் பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோவிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர்.

அக்காலத்தில் சலவைத்தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை மணல் மீது கவிழ்த்து வைத்து மறுநாள் எடுப்பது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை எற்படுத்தியது. அன்று இரவு கோவில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்மன் தோன்றி, தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அதைச்சுற்றி கோவில் கட்டி வழிபடுங்கள் என்று கூறியதால் அவ்வாறு கோவில் கட்டி வழிபாடு செய்தனர். இன்றும் கர்ப்பகிரஹத்தில் அம்பாள் அருகே உள்ள தாழிக்கும் பூஜை நடைபெறுகின்றது.சிலை வரலாறு..சிலகாலம் கழித்து அம்பாளுக்கு சிலை அமைக்க முடிவு செய்தனர். அப்போது கோவில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்பாள் தோன்றி பக்கத்தில் உள்ள அரியநாயகீபுரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு வயலில் எனது சிலை புதைந்துள்ளது. அங்கு சென்றால் வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் தோன்டினால் சிலை கிடைக்கும் என்று கூறியது. அதே சமயத்தில் வயல் சொந்தக்காரர் கனவில் அம்பாள் தோன்றி வயலை தோன்டி சிலை எடுப்பதை தடை செய்ய வேண்டாம் என்று கூறியது. அம்பாள் சொன்னபடி கருடன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தற்போது வழிபட்டு வரும் கருங்கள் சிலை சுயம்புவாக கிடைத்தது. அந்த சிலையை பூஜை செய்து பக்தியுடன் முக்கூடலுக்கு கொண்டு வந்து மண்தாழிக்கு அருகில் சிலையை வைத்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

0 Comments 0 Comments
0 Comments 0 Comments