ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள்.. நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி!

ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள்.. நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி!

சென்னை: ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள் என நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.. நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் நக்கீரன் இதழில் ஆளுநர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டு அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் நக்கீன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நக்கீரன். அப்போது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கூறிய நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்க கோரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்

சிறையில் அடைக்க முடியாது அடிப்படை ஆதாரமற்ற வகையில் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். எனவே கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக மறுத்து விட்டார்

நக்கீரன் பணி தொடரும் புலனாய்வு செய்து வெளியிடும் 'நக்கீரன்' பணி தொடரும். செய்தியில் ஆட்சேபம் இருந்திருந்தால் மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இவ்வாறு நக்கீரன் கோபால் விடுதலைக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0 Comments 0 Comments
0 Comments 0 Comments